ட்ரெண்ட் ஆகும் #IStandWithSachin

  ட்ரெண்ட் ஆகும் #IStandWithSachin

இன்னும் ஒருவர் ஒருபடிமேலே போய் உலகம் சச்சினுக்கு எதிராக இருந்தால் நான் உலகத்துக்கு எதிராக மாறுவேன் என்று சச்சின் மீதான தன் அன்பை உச்சமாகக் காட்டியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் ஒற்றுமையைத்தான் வலியுறுத்தினார்: ட்ரெண்ட் ஆகும் #IStandWithSachin
சச்சின் டெண்டுல்கர்.







விவசாயிகள் போராட்டத்துக்கு வெளிநாட்டுப் பிரபலங்கள் அளித்த ஆதரவை எதிர்த்து சச்சின் டெண்டுல்கர் தேச இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும், இது உள்நாட்டுப் பிரச்சினை என்பதாக ட்வீட் செய்தார். இதனையடுத்து அவர் மீது கடும் விமர்சனங்களை நெட்டிசன்கள் முன்வைத்தனர்.

ஒருமுறை மரியா ஷரபோவா 2015-ல் சச்சினா? யார் என்றே தெரியாதே? என்று கேட்டு சச்சின் ரசிகர்களிடம் வசவுகலை வாங்கிக்கட்டிக்கொண்டார். ஆனால் இப்போது விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக சச்சின், கோலி, உள்ளிட்டோர் ட்வீட் செய்ய அது பெரும் சிக்கலானது, சச்சினை நெட்டிசன்கள் வசைமாரிப் பொழிந்து தள்ளிவிட்டனர். இதனையடுத்து மன்னித்து விடு மரியா, நீங்கள் கூறியது சரிதான் என்று கேரள நெட்டிசன்கள் சிலர் சச்சினுக்கு எதிராக பதிவிட்டு ட்ரெண்டிங் செய்தனர்.

இதனையடுத்து சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள்படை அவரை விமர்சனங்களிலிருந்து காப்பாற்ற #IStandWithSachin என்ற ஹேஷ்டேகை ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
இதில் சச்சின் நாட்டுக்கு ஆற்றிய சேவை உட்பட அவர் பலருக்கும் செய்த உதவிகள் என்று பட்டியலிட்டு விமர்சனங்களிலிருந்து அவரை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகின்றனர்..

அதில் அவர்கள் ‘வெறுப்பை உதறுங்கள், சச்சினுக்கு உதவ கரம்கோர்ப்போம்’ என்று பதிவிட்டு வருகின்றனர்.

24 ஆண்டுகளாக கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தோளில் சுமந்தவர் சச்சின் அவரை ஆதரிப்போம், கடினமான காலங்களில் அவர் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்துள்ளார் என்று இந்த ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.சிலர் கேரள இளைஞர்களைச் சாடியுள்ளனர், பாரத ரத்னா சச்சினை இழிவுபடுத்தலாமா என்று கேட்டு பதிவிடுகின்றனர்.

இன்னும் சிலர் சச்சின் வாழும் நாட்டில் இந்தியக் குடிமகனாக இருக்கப் பெருமைப்படுகிறோம் என்று பதிவிடுகின்றனர்.

இன்னும் ஒருவர் ஒருபடிமேலே போய் உலகம் சச்சினுக்கு எதிராக இருந்தால் நான் உலகத்துக்கு எதிராக மாறுவேன் என்று சச்சின் மீதான தன் அன்பை உச்சமாகக் காட்டியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுதும் பிரபலமானவர், ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு சச்சின் பெயரை வைக்கும் அளவுக்கு அவர் இந்தியாவுக்கு புகழ் சேர்த்துள்ளார் என்று சச்சின் புகழ்மாலையை இந்த ஹேஷ்டேக்கில் தொடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்,

இப்படியாக #IStandWithSachin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.