எமிஸ் நம்பரை திருடி அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்த்தால் அவர்களுக்கான கட்டணத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் சோழ மண்டல மாநாட்டில் தீர்மானம் ...

எமிஸ் நம்பரை திருடி அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்த்தால் அவர்களுக்கான கட்டணத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் சோழ மண்டல மாநாட்டில் தீர்மானம் ....



 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சோழமண்டல மாநாடு இன்று திருவாரூரில் காசி ரெசிடென்சி ஓட்டலில் நடைபெற்றது.

 இம்மாநாட்டில் தஞ்சை மயிலாடுதுறை நாகை திருவாரூர் மாவட்ட பள்ளி நிர்வாகிகள் சங்கத் தலைவர்கள்  கலந்துகொண்டு.....

 தனியார் பள்ளிகளுக்கு இன்று உள்ள பிரச்சனைகள் குறித்தும்

 பள்ளிகள் திறக்கப்பட வேண்டியது குறித்தும்

தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடவும்

100% கல்வி கட்டணம் வசூலிக்கவும்

நியாயமான கல்விக் கட்டணத்தை கல்வி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கவும்...

 பழைய பள்ளி கட்டிடங்களுக்கு டிடிசிபி கட்டிட அனுமதி கேட்க கூடாது என்றும்....

நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும்.....

பழைய கல்வி கட்டண பாக்கி முழுதும் செலுத்தி டீ.சி வாங்கி கொண்டு தான் தனியார் பள்ளியில் அரசு பள்ளியில் மாணவர்களை அனைவரும் சேர்க்க வேண்டும். டிசி இல்லாமல் ஒரு மாணவன் கூட யாரும் எந்தப் பள்ளியிலும்  சேர்க்க கூடாது என்றும்....



இ எம் ஐ எஸ்  என்னை திருடி மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்த்து இருந்தால் அந்த மாணவர்களுக்குரிய கல்வி கட்டண பாக்கியை அரசு செலுத்த வேண்டும் என்றும் ...முடிவு செய்யப்பட்டது.

பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை அந்தந்த பள்ளிகளில் நடத்தி பள்ளி நிர்வாகம் தரும்   மதிப்பெண்களை அரசு தேர்வுத்துறை மார்க் கார்டில்  அனைவருக்கும் அச்சிட்டு  தர வேண்டும் என்றும் அரசை கேட்டுக் கொள்வது என்றும்...

 சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு படி  அனைவரும் 75% கல்வி கட்டணம் கட்ட வேண்டும் என்பதற்கும் மீதமுள்ள 25% கல்விக் கட்டண பாக்கியையும்  கட்ட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் போடும் உத்தரவையும் இணைத்து 100% கல்வி கட்டணம் பெற்றோர்கள் கட்டாயம்  கட்ட வேண்டும் என்று அரசு ஆணையாக வெளியிட வேண்டும் என்று சோழ மண்டல மாநாட்டு  மூலம்தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் .

 இம்மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் மாநில துணைத் தலைவர்கள்

கோ.சி. மலையரசன் அருண்குமார். மாவட்ட கௌரவத் தலைவர்  சந்திரா முருகப்பன்.  நீலன் அசோகன் எம்.டி. பாணி.  சின்னராஜ்  மாவட்ட தலைவர்கள் ரமேஷ். இளையராஜா. சாமிநாதன்.விஜயன். கார்த்திகேயன். ராஜகோபால். பிரபாகர்.  வீரமணி. குமாரசாமி.

 தாமரை தன்ராஜ். கமலக்கண்ணன். ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை தெரிவித்ததன்  அடிப்படையில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது... என்கிற நல்ல தகவல்களை அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.