தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை அரசாங்கமே வழங்க வேண்டும். : அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் பதிலடி

தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை அரசாங்கமே வழங்க வேண்டும். : அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் பதிலடி.....



தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியத் தொகையை தமிழக அரசு நிர்ணயம் செய்யும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கல்விக் கட்டணம் நிர்ணயித்து இவ்வளவு தான் வாங்க வேண்டும் என்று நிர்ணயிப்பது போன்று இவ்வளவு சம்பளம் தந்தாக வேண்டும் என்று நிர்ணயிப்பது கூட ஒருவகை திணிப்பு தான்.

தினந்தோறும் வரவுக்கும் செலவுக்கும் திண்டாடி வரும் தனியார் பள்ளிகளை இழுத்து மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.

பள்ளிகள் வருமானத்திற்கு தக்கவாறு சம்பளம் வழங்க முடியுமே தவிர இவ்வளவு சம்பளம் கொடுத்தாக வேண்டும் என்று நிர்ணயிப்பது நடைமுறைக்கு ஒத்துவராது.



ஒருவேளை அரசு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு சம்பளத்தை நிர்ணயிப்பது விட்டு அது கொடுத்தாக வேண்டும் என்று சொல்வதை விட்டுவிட்டு இவர்களுக்கான ஊதியத்தை அரசே வழங்கினால் சாலச் சிறந்ததாக இருக்கும்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் ஆண்டுதோறும் 30,000 கோடி ரூபாய்களை அரசு செலவழிக்கிறது.

இவ்வளவு செலவு செய்தும் தனியார் பள்ளிகளுக்கு இணையான தரமான கல்வியை அரசு பள்ளிகளில் அரசு பள்ளி ஆசிரியர்களால் வழங்க முடியவில்லை.

ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டு தரமான கல்வியை வழங்கி வருகிறார்கள் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி  தனியார் பள்ளி ஆசிரியர்களை நம்பித்தான் உள்ளது.



அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எவ்வளவுதான் அள்ளிக் கொடுத்தாலும் அவர்கள் தங்கள் பணியை சரியாக செய்வதில்லை அதுமட்டுமல்ல இந்த அரசுக்கு எதிராகத்தான் செயல்பட்டு கொண்டுள்ளார்கள் இப்போதுகூட அவர்கள் முழு ஆதரவும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆகத்தான் இருக்கிறது.

ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அப்படி இல்லை நீங்கள் அவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்றால் கூட மீண்டும் எடப்பாடி தான் முதல்வராக வரவேண்டும் என்று அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தங்களை தேடி வருகின்ற பெற்றோரிடம் வெற்றி நடைபோடும் தமிழகத்தின் சாதனைகளை சொல்லி வருகிறார்கள்.

தேர்தல் அறிக்கையில் எந்த கட்சியும் எங்களை பற்றி கவலைப்படவில்லை ஆனால் அதிமுக எங்களை நினைத்து இருக்கிறது. இதை வரவேற்கும் அதே வேளையில் அனைத்து பாரத்தையும் தனியார் பள்ளிகள் மீது விட்டுவிடக்கூடாது.

ஒரு சில பள்ளிகள் கொள்ளை அடிக்கிறது இல்லை என்று சொல்லவில்லை அதற்காக ஒட்டுமொத்த பள்ளிகளையும் அப்படி நினைப்பது தவறு.

இந்த Corana காலத்தில் ஏற்பட்ட மன உளைச்சலில் 200க்கும் மேற்பட்ட பள்ளி தாளாளர்கள் மாண்டு போய்விட்டார்கள். கொஞ்சம் பேர் மீண்டு வந்துள்ளார்கள் இன்னும் சிலரின்  உயிர் ஊசலாடிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இப்படி ஒரு திட்டம் போட்டு எங்களை நசுக்க பார்த்தால் நாங்கள் எங்கே போவது என்று இப்போது பல நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். இது கட்டாயத் இனிப்பாக மாறும் ஆனால் நிறைய பேர் செத்து போய் விடுவார்கள்.

கடந்த 12 மாதங்களாக ஊதியம் ஊதியமே இல்லாமல் வாழ வழி இல்லாமல் தவித்து வந்த தனியார் பள்ளி ஆசிரியர்களை இதுவரை கண்டுகொள்ளாமல் இப்போது மட்டும் எங்கள் மீது கரிசனம் வந்ததற்கு என்ன காரணம்....?  எங்களிடம் லட்சக்கணக்கான வாக்குகள் உள்ளது என்பதாலா....?

நாங்கள் அரசு பள்ளி ஆசிரியர்களை போன்று அரசு பள்ளி மாணவர்களுக்கும் அரசுக்கும் துரோகம் செய்ததில்லை உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள் வரவேற்கின்றோம் அதற்காக ஒட்டுமொத்த சுமையையும் தனியார் பள்ளி நிர்வாகிகள் மீது சுமத்தினார் அவர்கள் தாங்க மாட்டார்கள். என்கின்றனர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் .