காலில் விழுவது முதல் கால் கழுவுவது வரை பல்வேறு வேலைகளை செய்யும் திமுக வேட்பாளர்கள் ......
தோல்வி பயத்தின் காரணமாக காலில் விழுவது முதல் கால் கழுவுவது வரை பல்வேறு வேலைகளை செய்துகொண்டுள்ளனர் திமுக வேட்பாளர்கள் .
அதன் படி அயன்பாக்ஸ் கொண்டு துணி தேய்த்து, காய்கறி விற்பனை செய்து, உணவு விடுதியில் உணவு தயார் செய்து தி.மு.க. வேட்பாளர் தங்க.தமிழ்செல்வன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன், போடி நகர் பகுதியில் தெருத்தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடி நந்தவனம் தெரு, காமராஜர் சாலை, பரமசிவன் கோவில் தெரு, சுப்பிரமணியசாமி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அவர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
நந்தவனம் தெருவில் வாக்கு சேகரிக்க சென்றபோது அங்கு முதியவர் ஒருவர் அயர்ன் கடையில், துணி தேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் நலம் விசாரித்த தங்க.தமிழ்ச்செல்வன், அவரிடமிருந்து அயர்ன் பாக்ஸ் வாங்கி துணி ஒன்றை தேய்த்துக் கொடுத்தார்.
பின், காய்கறி கடையில் பெண் ஒருவர் காய்கறி விற்பதை பார்த்த தங்க தமிழ்ச்செல்வன் அவருடன் இணைந்து காய்கறி விற்பனை செய்தார்.
மேலும் ஒரு காலை நேர உணவகத்திற்கு சென்று உணவு தயார் செய்யும் தொழிலாளர்களுடன் இணைந்து உணவு தயார் செய்தார், இந்த செயல் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது
பின்னர் அப்பகுதியில் பெண்கள், இளைஞர்களிடம் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளை விளக்கி வாக்கு சேகரித்தார். தங்க தமிழ்ச்செல்வனுடன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.லட்சுமணன், தி.மு.க. நகர செயலர் மா.வீ.செல்வராஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.