நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள், மிளகு, கேரட் ஜூஸ் செய்வது எப்படி?
நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் மஞ்சள், மிளகு, கேரட் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக்கொண்டு நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மஞ்சள், மிளகு, கேரட் ஜூஸ் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மக்கள் பல ஆண்டுகளாக மஞ்சள், மிளகு, கேரட் ஜூஸ் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வருகின்றனர். நாம் மசாலாப் பொருட்களை சுவைக்காக மட்டும் பயன்படுத்தவில்லை. அவற்றின் முழு நன்மையை தெரிந்தே பயன்படுத்தி வருகின்றனர். மசாலாப் பொருட்களை அளவாக பயன்படுத்தினால், மிகக் குறைவான பக்கவிளைவுகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள், மிளகு, கேரட் ஜூஸ் செய்வது எப்படி?
யாராலும் ஒரே நாளில் நோய் எதிர்ப்பு சக்தியை முடியாது. ஆனால், நமது பாரம்பரிய உணவுப் பொருட்களின் மூலம் மெல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். குறிப்பாக மஞ்சளில் ஆண்ட்டி ஆக்ஸிடன்கள் நிரம்பியுள்ளன. அதே போல, இயற்கையான உணவுப் பொருட்களின் மூலம் நொய் எதிர்ப்பு அதிகரிக்கலாம். கேரட்டில் அதிக அளவு சி வைட்டமின் உள்ளது.
மக்கள் பொதுவாக எல்லா இடங்களிலும் காய்ச்சல் வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்கிறோம். நோய்தொற்று வைரஸ்களைத் தடுக்க என்ன வழி என்று தேடுகிறோம். ஆனால், அப்படியான நோய் எதிர்ப்பு சக்திய நம்மால் ஒரே நாளில் உருவாக்க முடியாது. பருவநிலை மாற்றத்தின் வரும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அவற்றை எதிர்த்துப் போராட நமது உடலில் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க நம் அன்றாட உணவுகளின் மூலம் தயாராக வேண்டும்.
நல்ல ஆரோக்கியமான உணவுகளையும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உணவுகளையும் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். குறிப்பாக, மஞ்சள், மிளகு, கேரட் ஆகியவை நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில் தங்க மசாலா பொருள் என்று மஞ்சளை அழைக்கின்றனர். மஞ்சளின் மருத்துவ குணம், அதன் நன்மைகளுக்காக உலகின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் நாள்பட்ட நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் சக்திமிக்க குணங்களைக்க் கொண்டுள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சலைப் போக்க அதில் உள்ள எதிப்பு பண்புகள் உதவியாக இருக்கும். மஞ்சளைப் போல, மற்றொரு மசாலாப் மருத்துவப் பொருள் மிளகு. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிப்பு பண்புகளைக் கொண்டது.
மசாலாப் பொருட்கள் மட்டுமில்லாமல், காய்கறிகளும் நோய் எதிர்ப்பு சக்திகளைக் கொண்டுள்ளன. கேரட் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. கேரட் உயிரணுக்களின் சேதத்தை எதிர்த்து போராடும் ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்டுள்ளது.
இப்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் மஞ்சள், மிளகு, கேரட் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக்கொண்டு நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மஞ்சள், மிளகு, கேரட் ஜூஸ் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
1.சிறிய அளவிலான கேரட்
2.சிட்டிகை மஞ்சள்
3.ஒரு தேக்கரண்டி மிளகு தூள்
4.தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:-
ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கலக்குங்கள். நீங்கள் விரும்புகிற திடம் கிடைக்கும் வரை நன்றாக கலக்குங்கள். இப்போது அந்த சாற்றை குடியுங்கள். மிதமான பயிற்சி செய்யுங்கள். ஏதேனும் மருந்து எடுத்துக்கொண்டிருந்தால் அதை தவிர்க்காதீர்கள்
இந்த மஞ்சள், மிளகு கேரட் சூஸ் பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.