சசிகலா ராமநாதபுரம் வருகை


 சசிகலா ராமநாதபுரம் வருகை



அ.ம.மு.க  தலைவரும் பொதுச்செயலாளருமான சசிகலா நடராஜன் இன்று மாலை 28.3.2021          4 - மணி அளவில் ராமநாதபுரம் வருகை தந்தார். சசிகலாவிற்கு ராமநாதபுரம் ராணி லக்குமி நாச்சியார், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்  G.முனியசாமி மற்றும் அ.ம.மு.க தோழமை கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இன்று பங்குனி பிரமோற்ஸவ விழா நடைபெற்றது. இதனையடுத்து ராமேஸ்வரம் சென்று நாளை காலை 4 மணி அளவில் 29.3.2021 ஸ்படிக லிங்க பூஜை மற்றும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அருள்மிகு இராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாள் ஸ்வாமிகளை தரிசனம் செய்துவிட்டு சென்னை செல்கிறார். 



 முன்னதாக ராமநாதபுரம் ECR ரோட்டில் வருகை தந்த சசிகலாவிற்கு  அ.ம.மு.க வேட்பாளர் G.முனியசாமி சிறப்பான வரவேற்பு அளித்தார். இதை பார்த்த சசிகலா வேட்பாளரின்  தோழைதட்டி கொடுத்து பாராட்டினார்.

ராமநாதபுரம்  மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி  N.A. ஜெரினா பானு