ஹெல்மெட் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு

ஹெல்மெட் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு



ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் P.K. பெருமாளுக்கு ஹெல் மெட் சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்க பனங்காட்டு படை கட்சி மாநில தலைவா  ராகேட் ராஜா மாநில ஒரு ஒருகிணைப்பாளர் இருவரும் தனி ஹெலிக்காப்டரில் கலெக்டர் வளாகத்திலுள்ள ஹெலிப்பேடில் வந்து இறங்கினார்கள்.அவர்களை திருவாடானை தொகுதி சட்டமன்ற வேட்பாளர் P.K. பெருமாள் நாடார்  ராமநாதபுரம் மிஸ்ரா நாடார் முதுகுளத்தூர் S.K.சதீஷ் நாடார் ஆகிய வேட்பாளர்கள் வரவேற்றனர். இதனையடுத்து ராமநாதபுரம் பாரதிநகர் மற்றும் திருவாடானை தொகுதி ராமநாதபுரம் தொகுதி ஆகிய பகுதிகளுக்கு தேர்தல் பரப்புரைக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் பனங்காட்டுப்படை கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி  N.A. ஜெரினா பானு