பவானியில் திமுக வேட்பாளர் கேப்டன் துரைராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 பவானியில் திமுக வேட்பாளர் கேப்டன் துரைராஜ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.



             ஈரோடு மாவட்டம் பவானி திமுக வேட்பாளர் கேப்டன் துரைராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்று காலை 10 மணிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் என் கே கே பெரியசாமி  திமுக தேர்தல் பணிமனை திறந்துவைத்து வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடந்தது இந்நிகழ்வில் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு மாறிய முன்னாள் எம்எல்ஏ P.G நாராயணன் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும் கலந்து  கொண்டனர்  அதைத் தொடர்ந்து வேட்பாளர் தேர்தல் பணிமனையில் இருந்து மக்களோடு மக்களாக நடந்து வந்து தாலுகா அலுவலகத்தில் என் கே கே பெரியசாமி  மற்றும் நகர செயலாளர் பாசி நாகராஜன் ஆகியோருடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  முன்னாள் அமைச்சர் என் கே கே பெரியசாமி பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் மக்கள் பொருளாதார சீர்குலைவு வேலைவாய்ப்பு இழப்பு விவசாய சட்ட மசோதா விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு போன்ற பல பிரச்சினைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் ஆட்சி மாற்றம் மக்களின் முகத்திலேயே தெரிகிறது திமுக அமோக வெற்றி பெறும் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Popular posts
சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழா ...!
படம்
அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து அண்ணாமலை சாட்டையடி போராட்டம்..!?
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
அமைதிக்கு பெயர் தான் சாந்தி....! அதிகம் பேசாமல் இருப்பது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும்...!!
மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்...
படம்