அனைத்து வகை பள்ளிகளையும் ஜூன் மாதம் இரண்டாம் தேதி திறக்க வேண்டி மே 10 திங்கட்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு ஆர்பாட்டம்..
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை டி.பி.ஐ. வளாகம் தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு காலை சரியாக 11 மணிக்கு.....
தலைமை...
கே .ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
முன்னிலை..... பேராசிரியர். ஏ. கனகராஜ் மாநிலத் தலைவர்.
சிறப்புரை...
மாநில மாவட்ட தலைவர்கள்.
கோரிக்கைகள்.....
1..தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழு... தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்படும் கல்வி கட்டணம் சென்ற ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் குறைப்பதை கைவிட்டு அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவழிக் கிறதோ அந்த தொகையை கல்வி கட்டணமாக அனைத்து பள்ளிகளுக்கும் அனைத்து வகுப்புகளுக்கும்
ஒரே மாதிரியாக நியாயமாக நிர்ணயித்து
தரவேண்டும்.
2..தொடக்கக்கல்வி இயக்குனர் திரு. முத்து பழனிச்சாமி அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக இருந்த போது ஸ்ரீ கிருஷ்ணா நிதி உதவி பெறும் உயர்நிலை பள்ளியில் ஏற்பட்ட
தீ விபத்தில் 98 மாணவர்கள்
தீயில் கருகி இறந்துபோனார்கள். அவர் தொடக்க கல்வி இயக்குனராக பணி புரியும்போது சென்ற வாரம் தொடக்க கல்வி இயக்குனரகம் தீ பிடித்து எரிந்தது..... அவர் பணி காலத்திலே எந்த கோப்புகளும் கையெழுத்திடாமல் பள்ளி நிர்வாகிகள் இழுத்தடித்தும்
நர்சரி பிரைமரி பள்ளிகளின் அங்கீகாரத்திற்காக முதன்மை கல்வி அலுவலர்களால் பரிந்துரைக்கப்பட்ட கோப்புகள் ஒன்றில் கூட கையெழுத்து போடாமல் 86 கோப்புகளை திருப்பி அனுப்பிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே செயல்படாத திறனற்ற தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை உடனடியாக பணி இடமாற்றம் செய்ய வேண்டும்.
3... அரசு துவக்கப் பள்ளிகளை தரம் உயர்த்துவது போல் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.
4....அரசு அங்கீகாரம் பெற்று பத்து ஆண்டுகளான அனைத்து வகை பள்ளிகளுக்கும் நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற அரசாணையை உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
5...2020.. 21 ஆம் கல்வி ஆண்டிற்கான
ஆர். டி. இ. கல்வி கட்டண பாக்கியை அனைத்து வகை பள்ளிகளுக்கும் உடனே வழங்கிட வேண்டும்.
6...அனைத்து வகை பள்ளிகளையும் அனைத்து வகுப்புகளையும் ஜூன் மாதம் இரண்டாம் தேதி மற்ற மாநிலங்களைப் போல் உடனடியாக திறக்கப்பட வேண்டும்.
7... கடந்த 13 மாதங்களாக பள்ளிகள் திறக்காமல் பாடம் நடத்தாமல் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு
மாதசம்பளமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதால்..... ஆசிரியர்களுக்கும் இன்ன பிற ஊழியர்களுக்கும் தெலுங்கானா அரசை போல் மாதம் ரூபாய் 2500 வாழ்வாதார நிதியும் மாதந்தோறும் 25 கிலோ அரிசியும் வழங்கி உதவிட வேண்டும்...
8....தனியார் பள்ளி நிர்வாகிகள் வாங்கியுள்ள
வாகன கடன் பள்ளி கட்டிடங்களுக்கான கடன் தொகை வட்டித் தொகை தவணை தொகையை
கட்ட முடியாமல் தத்தளித்து வருவதால் இன்னும் ஓராண்டு காலத்திற்கு கால அவகாசம் வழங்கிட மத்திய மாநில அரசுகள் உதவிபுரிய வேண்டும் என்று வலியுறுத்தி.....
**வரும்
மே 10ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
** தனித்தனியே ஆங்காங்கே பேசிக் கொண்டிருக்காமல் தற்கொலை செய்து கொள்வோம் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்ற பள்ளி நிர்வாகிகள் தைரியத்தோடும் தன்னம்பிக்கை
யோடும் ஒருவருக்கொருவர் தகவல் தந்து அன்பு பாராட்டி அழைத்து வாருங்கள்.....
இப்பொழுதாவது ஒன்று சேர்ந்து வந்து உங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள நீங்கள் முன்வர வேண்டும் இப்பொழுது
நீங்கள் வரவில்லை என்றால் உங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது...
இந்தாண்டு பள்ளிகளை திறக்க வில்லை என்றால் இனி எப்போதும் பள்ளிகளைத்
திறக்க முடியாது திறந்தும் பயனில்லை என்பதை உணர்ந்து சங்க பேதம் மறந்து பெரிய பள்ளி
சிறிய பள்ளி என்கிற எண்ணமெல்லாம் இல்லாமல் தனியார் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுபட்டு வாருங்கள்
வென்று காட்டுவோம்.
***மே 10... ஆட்சி எதுவானாலும் கவலைப்பட வேண்டாம்....
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் அதிகாரிகள் மாறுவதில்லை..
செயல்படாத அதிகாரிகளை மாற்றவேண்டிய கடமை நமது மாநில சங்கத்திற்கு உண்டு. மாற்றம் ஒன்றே மாறாதது... தொடக்கத்திலேயே நமது குறைகளை கோரிக்கைகளை சொல்லி வெற்றி பெறவேண்டும் ...
வெற்றிபெறுவோம் இல்லையென்றால் சில அதிகாரிகள் தனியார் பள்ளிகள் மீது குறை சொல்லி தனியார் பள்ளிகளை தலைதெறிக்க விடுவார்கள் தயங்காமல் வாருங்கள்.... தலைமை ஏற்க நாங்கள் தயார்.... வெற்றிகளை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
என்றும் தனியார் பள்ளிகளின் நலம் நாடும் உங்கள்
கே.ஆர். நந்த குமார் மாநில பொதுச் செயலாளர்.