வரலாற்றில் 2-ம் அலை தான் ஆபத்தாக இருந்துள்ளது: எய்ம்ஸ் தலைவர்

  வரலாற்றில் 2-ம் அலை தான் ஆபத்தாக இருந்துள்ளது: எய்ம்ஸ் தலைவர்

*புது டில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, “நூறாண்டுகளுக்கு முந்தைய தொற்றுநோயை பார்த்தால் இரண்டாம் அலை தான் ஆபத்தானது” என கூறியுள்ளார்.*

*தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலகில் கொரோனா வைரஸின் பல்வேறு வகைகள் பரவி வருகின்றன. நாம் மூன்று நான்கு விஷயங்களை செய்ய வேண்டும். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர கட்டுப்பாட்டு மண்டலத்தை உருவாக்கி, சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, கூட்டத்தை தடை செய்ய வேண்டும். மூன்றாவதாக தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும்.*

*ரெம்டெசிவிர் கொரோனாவுக்கு எதிராக எந்த விளைவையும் ஏற்படுத்தாது என சீனாவின் முதல் ஆய்வறிக்கை கூறுகிறது.* *பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை அம்மருந்து தடுப்பதாகவும், ஆனால் இறப்பை தடுக்காது என்றது.* *அம்மருந்து எபோலாவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு ஆன்டிவைரல் மருந்து.* *தற்போதைக்கு நம்மிடம் நல்ல ஆன்டிவைரல் மருந்து இல்லை. கொரோனாவுக்கு நல்ல சிகிச்சையும் இல்லை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறினார்.*

Murugan. Reporter

Popular posts
சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழா ...!
படம்
அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து அண்ணாமலை சாட்டையடி போராட்டம்..!?
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
அமைதிக்கு பெயர் தான் சாந்தி....! அதிகம் பேசாமல் இருப்பது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும்...!!
மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்...
படம்