அரியலூர் மதுபோதையில் தகராறு- ரவுடி வெட்டி கொலை- 3 பேர் கைது.

 அரியலூர்  மதுபோதையில் தகராறு- ரவுடி வெட்டி கொலை- 3 பேர் கைது.



*அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி வயது 44 ரவுடி. இவர் புதுப்பாளையத்தில் இருந்து இடையக்குறிச்சி செல்லும் வழியில் உள்ள முந்திரி தோட்டத்தில் மதுபோதையில் படுத்து தூங்கி உள்ளார். இதனைக் கண்ட நிலத்தின் உரிமையாளர் தர்மராஜ் தட்டிக் கேட்டுள்ளார்.*

*இதனால் ஆத்திரமடைந்த கொளஞ்சி தான் வைத்து இருந்த அரிவாளால் தர்மராஜை வெட்டி உள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் கொளஞ்சியை சுற்றி வளைத்து தாக்கினர். இதில் கொளஞ்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த தர்மராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.*

*இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் விரைந்து வந்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.*

Murugan. Reporter