ராமநாதபுரத்தில் நடிகை நமீதா வாக்கு சேகரிப்பு
ராமநாதபுரம் மார்ச்-1
ராமேஸ்வரத்தில் நடிகை நமீதா பா.ஜ.க வேட்பாளர் வழக்கறிஞர் குப்பு ராமுவை ஆதரித்து நேற்று நடிகை நமீதா ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி BJP வேட்பாளர் குப்பு ராமுவை ஆதரித்து தாமரை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு ராமேஸ்வரம் நகர், சுற்றி உள்ள கிராம பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அங்கு கூடியிருந்த பொதுமக்கள் குலவையிட்டு ஆரத்தி எடுத்து மாலை, சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பை அளித்தனர். அப்போது நமீதா பேசியதாவது:-
அ.இ.அ.தி.மு.க மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததும் அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ.1500/- ஒரு குடும்பத்திற்கு தலா 6 இலவச சிலிண்டர்கள், இலவச வாஷிங் மிஷின், ஆகியவற்றை முதலமைச்சர் பழனிச்சாமி வழங்க உள்ளார். மேலும் இந்த தொகுதிக்கு மத்திய அரசு வழங்கும் பல திட்டங்கள் அதிமுகவின் புதிய அரசு மூலம் நடைமுறை படுத்தப்பட உள்ளது. ஆகவே நீங்கள் வாக்காள பெருமக்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.மாவட்ட BJP தலைவர் முரளிதரன், அதிமுக நகரச் செயலாளர் K.K.அர்ஜுனன், BJP நகரத் தலைவர் ராமநாதன், நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி N.A. ஜெரினா பானு