தலித் இளைஞரை இழிவாக நடத்திய உரிமையாளரை கைது செய்ய கோரிக்கை...

தலித் இளைஞரை இழிவாக நடத்திய உரிமையாளரை கைது செய்ய கோரிக்கை...



 சேலம் மாநகரில் இயங்கிவரும் சிவா டெக்ஸ்டைல்ஸ் கடையில் லிப்ட் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த தலித் இளைஞன் கோபிநாத்தை சட்டையை கழற்ற வைத்து, முட்டி போட வைத்து, நெஞ்சின் மீது எட்டி உதைத்து சாதி குறித்து இழிவாக திட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய சிவா டெக்டைல்ஸ் கடையின் இரண்டாவது  உரிமையாளர் மீதும், அக்கடையில் HR ராக பணியாற்றும் நாகராஜ் என்பவர் மீதும் தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யுமாறும், சிவா டெக்டைல்ஸ் கடையின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக அரசையும், தேசிய SC/ST ஆணையத்தையும், மாநில மனித உரிமை ஆணையத்தையும், சேலம் மாவட்ட நிர்வாகத்தையும், சேலம் மாநகர காவல் துறையையும்  அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் கேட்டு கொள்வதாக அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில தலைவர் சேலம் ஜங்ஷன் அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எம் .அருள் நேரு. சேலம் மாவட்ட நிருபர்