ராமநாதபுரம் மார்ச்-5
பட்டணம் காத்தான் கிராமத்தில் வேட்பாளர்கள் கண்ணப்பனுக்கும் கரு. மாணிக்கத்திற்கும் ஊர் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு-வீரவாள் பரிசு.
ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம் காத்தான் கிராமத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கரு. மாணிக்கத்தை ஆதரித்து முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது கண்ணன் கோயிலில் அருகில் பட்டாசுகள் வெடித்து தாரை தப்பட்டை முழங்க ராஜகண்ணப்பனுக்கும், காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கத்திற்கும் ஊர் பொதுமக்களின் சார்பில் ஆள் உயர ரோஜா பூ மாலை அணிவித்தும், தலையில் கீரிடம் அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட மாணவரணி சார்பில் கண்ணப்பனுக்கும், திருவாடான தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கரு. மாணிக்கத்திற்கும் மாணவரணி மாவட்ட செயலாளர் கூரிதாஸ் வீரவாள் பரிசளித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி N.A. ஜெரினா பானு