அதிமுக சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு ஜி.வெங்கடாஜலம் அவர்களை ஆதரித்து பிரச்சாரம்

அதிமுக சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு ஜி.வெங்கடாஜலம் அவர்களை ஆதரித்து பிரச்சாரம்  




அதிமுக சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு ஜி.வெங்கடாஜலம் அவர்களை ஆதரித்து  அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை அவர்கள் ஜான்சன் பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் வாக்காளர்களிடம் அதிமுக ஆட்சியில் சேலம் மாநகரத்தில் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க  மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது என்றும் அதிமுக ஆட்சியில் தலித் மாணவ மாணவிகளுக்கு  கல்வி கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது என்றும் வடக்கு தொகுதியில் போட்டியிடும் திரு வெங்கடாசலம் அவர்கள் நம் மக்களின் நலனுக்காக கடுமையாக உழைப்பவர் என்றும் அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். உடன் அதிமுக அஸ்தம்பட்டி பகுதி கழக பொருளாளர் மணல் அய்யனார் உள்ளிட்ட அதிமுக அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.