ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நுண்

ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி 



ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர்-மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின் போது மாவட்ட தேர்தல் அலுவலர்-மாவட்ட ஆட்சிக் தலைவர் 

தெரிவித்ததாவது:-

 ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 02-05-2021 காலை 8 மணி முதல் ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு  தலா 14 மேஜைகளும், தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தலா 8 மேஜைகளும் நிர்ணயிக்கப்பட்ட அறைகளில், தனித்தனியாக அமைக்கப்படும் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் ஆகியோர் பணியில் ஈடுபடுவார்கள்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருதிவரை நுண்பார்வையாளர்கள் பணி மிகவும் முக்கியமானதாகும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான சட்டமன்ற தொகுதி மற்றும் எந்த மேஜையில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து கணினி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும்.  முதலில் தபால் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கப்படும் தொடர்ந்து மிண்ணனு வாக்குபதிவு எந்திரங்கலில் 

பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒரு சுற்று எண்ணிக்கை என மிண்ணனு வாக்குபதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து எடுக்கப்பட்டு சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு அடுத்த சுற்றுக்கான வாக்குப் பதிவு எந்திரங்கள் எடுக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார். இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) க.நஜிமுன்நிஷா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திக், தேர்தல் பயிற்சி பொறுப்பு அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் வாக்கு எண்ணும் பயிற்சியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு

Popular posts
சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழா ...!
படம்
அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து அண்ணாமலை சாட்டையடி போராட்டம்..!?
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
அமைதிக்கு பெயர் தான் சாந்தி....! அதிகம் பேசாமல் இருப்பது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும்...!!
மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்...
படம்