ராமநாதபுரம் அரண்மனையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

ராமநாதபுரம் அரண்மனையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.



 ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரண்மனையில் இராஜா.சேதுபதி ஸ்ரீமத் ஹிரண்ய ஹெர்பயாஜி  ரவிகுல முத்து விஜயரகுநாத சேதுபதி N.குமரன் சேதுபதி, இராணி N. இலக்குமி குமரன் சேதுபதி இவர்களின் இல்ல திருமண விழா பாளையம்பட்டி இளைய ஜமீன் சிரஞ்சீவி R.பத்ம  (ராஜா) அஸ்வினுக்கும்,  ராமநாதபுரம் இளைய ராணி செள பாக்கியவதி K. மஹாலட்சுமி நாச்சியார் இவர்களின் திருமணம் 29.4.2021 வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி இன்று 25.4.2021 காலை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



 இதில் இளையராஜா மதுக்கூர் ஜமீன்தார் K.B.M. நாகேந்திர சேதுபதி மற்றும் திவான் பழநிவேல்பாண்டியன் மற்றும் உற்றார், உறவினர்கள் கலந்துகொண்டனர். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு