மூன்று பேருக்கு முக்கியமான மந்திரி பதவியாம்.....?

மூன்று பேருக்கு முக்கியமான மந்திரி பதவியாம்.....?

திமுக அமைச்சர்கள் பட்டியலில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற கணிப்பு பலமாகவே வலம் வருகிறது.. அதில் இந்த முறை இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவது என்பதில் திமுக தலைவர் உறுதியாக இருக்கிறாராம்.. அந்த வகையில், 3 பேருக்கு அமைச்சர்கள் போஸ்டிங் உறுதி என்கிறார்கள்.

ஒருவர் உதயநிதி ஸ்டாலின், மற்றொருவர் அன்பில் மகேஷ், இன்னொருவர் டாக்டர் எழிலன் ஆவார்.. இவர்கள் 3 பேருமே ஜூனியர்கள்தான்.. 3 பேருமே வாரிசுகள்தான்.. எனவே இந்த 3 பேருமே அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

உதயநிதிக்கு சீட் தந்ததால், ஏற்கனவே திமுக சீனியர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், இப்போது இவர்கள் 3 பேருக்குமே அமைச்சர் பதவி என்றால், பெருத்த பொருமல் திமுகவில் இருந்து சீனியர்களிடம் எழவே செய்யும் என்றாலும், இந்த 3 இளைஞர்கள் பலம் பொருந்தியவர்கள் என்பதையும் திமுகவின் பெரும்பான்மையோர் மறுப்பதற்கில்லை.

இருந்தாலும் இந்த மூன்று பேரும் கண்டிப்பாக ஜெயிப்பார்கள் என்று சொல்ல முடியாத சூழ்நிலை உள்ளது ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் மருத்துவர் எழிலன்க்கு டெபாசிட் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது ஏனென்றால் தேர்தல் நேரத்தில் அவர் பேசிய பேச்சு அப்படி. அதேபோல் அன்பில் மகேஷ் அவுட் ஆகிறார் தப்பித்தவறி ஜெயித்தால் சேப்பாக்கத்தில் உதயநிதி ஜெயிக்கலாம் அதுவும் இழுபறியில் தான் இருக்கும்.

நிலைமை இப்படி இருக்கும்போது இவர்கள் எப்போது மந்திரி யாவது.....?