மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள்...
மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்களின் விவரத்தை இப்போது பார்ப்போம். தமிழகத்திலயே மிககுறைந்த வாக்கு வித்தியாசத்தில் சென்னை தியாகராயநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார்.
1.தியாகராயநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணனை 137 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்,
2. மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சரஸ்வதி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்
3. தென்காசி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தான் பாண்டியனை 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
4. மேட்டூர் தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சதாசிவம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஸ்ரீநிவாச பெருமாளை 656 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
துரைமுருகன்
5. காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரைமுருகன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அஇஅதிமுக வேட்பாளர் வி ராமுவை 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
6. கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட அஇஅதிமுக வேட்பாளர் அசோக்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் செங்குட்டுவனை 794 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.