அசாம் பாசிச நாஜி அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

அசாம் பாசிச நாஜி அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.


ராமநாதபுரம் செப்.24

அசாம் பாசிச நாஜி அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அசாமில் நேற்று காவல்துறையினரால் 4,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சி செய்ததில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களை கண்டித்து மாவட்ட துணைத்தலைவர் சோமு தலைமையில், இன்று(24/09/21) ராமநாதபுரம் சந்தை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் மற்றும் எஸ்டிடி யூ மாவட்ட நிர்வாகிகள், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆசாத் வரவேற்புரையாற்றினார், மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், பாப்புலர் ஃப்ரண்ட் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முகமது மன்சூர் கண்டன உரையாற்றினார்கள், மேலும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹனீப் மற்றும் தொகுதி தலைவர் பீர் முகைதீன் கண்டன கோஷம் எழுப்பினர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்