தெய்வ திருமகன் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி விழா 59 வது குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட அ.இ அதிமுக கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
ராமநாதபுரம் அக்-28
ராமநாதபுரம் மாவட்டம் தெய்வ திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி விழா மற்றும் 59 வது குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தின் அஇ அதிமுக கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் , முன்னாள் அமைச்சர் ஏ.அன்வர் ராஜா அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமை ஏற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். இதில் முன்னாள் MP நிறை குளத்தான் ஒன்றிய கழக செயலாளர்கள். அசோக், முத்தையா, குப்புச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர், ராமநாதபுரம் நகர் செயலாளர் அங்குச்சாமி பரமக்குடி முன்னாள் நகர செயலாளர் ஜமால், அனைத்துலக MGR மன்ற இணைச்செயலாளர் RG.ரெத்தினம், ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பால்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாலசிங்கம், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சரவணன் G.M.மாரிமுத்து ஒன்றிய இணைச் செயலாளர் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அதிமுகவை சேர்ந்த ஒன்றிய,நகர, பேரூராட்சி கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு