மீதமுள்ள 25 சதவீத கல்வி கட்டணத்தை உடனே தர வேண்டும்
மத்திய அரசு 100% ஆர். டி. இ.கல்வி கட்டண பாக்கி தந்த பின்னர் அதை அனைத்து மாநில அரசுகளும் அனைத்து மாநில தனியார் பள்ளிகளுக்கும் தந்த பின்னால் தமிழக அரசு மட்டும் 75 சதவீத கல்வி கட்டணம் வழங்கியதை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் ஏற்காது....
மீதமுள்ள 25 சதவீத கல்வி கட்டணத்தை உடனே தர வேண்டும். 419 கோடியே 52 லட்சம் தருவதாக அரசாணை போட்டு 302 கோடியை மட்டும் தந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை மீதமுள்ள தொகையை உடனே தர வேண்டும் என்று கேட்டு அதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது..
எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் பாக்கியுள்ள 25 சதவீத கல்வி கட்டணத்தை உடனே தர வேண்டும் என்று வலியுறுத்தி இன்று இயக்குனர்கள் திருவாளர்கள்... ராமேஸ்வர முருகன் நாகராஜ் முருகன் ஆகியோரை மாநில பொதுச் செயலாளர் கே. ஆர்.நந்தகுமார் தலைமையில் சங்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசியபோது எடுத்த படம்.