காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட உதவிகள்
பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 117 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் காணொலி காட்சி மூலம்இன்று வழங்கப்பட்டது.
வேளாண்மை துறையில் 96.31 லட்சமும், தோட்டக்கலை துறையில் 1.35 லட்சமும், மகளிர் திட்டத்தில் 5 லட்சமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 8.63 லட்சமும், வருவாய்த்துறையில் 2.40 லட்சமும், கூட்டுறவுத்துறையில் 27.74 லட்சமும், சமூகநலத்துறையில் 7.30 லட்சமும் ஆக மொத்தம் 148.73 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி இன்று வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் விபரம் பின்வருமாறு:
வருவாய்த்துறையில், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தில் 7 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தில் 7 பேருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கான உதவித்தொகை திட்டத்தில் 6 பேருக்கும் ஆக மொத்தம் 20 பேருக்கும், சமூகநலத்துறையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் இலவச தையல் இயந்திரம் திட்டத்தில் 16 பேருக்கும், சிவகாமி அம்மையார் நினைவு முதலமைச்சர் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 13 பேருக்கும் ஆக மொத்தம் 29 பேருக்கும், கூட்டுறவுத்துறை பிரிவில், பயிர்கடன் திட்டத்தில் 8 பேருக்கும், கைம்பெண் கடன் திட்டத்தில் 1 நபருக்கும், மாற்றுத்திறனாளிக் கடன் திட்டத்தில் 5 பேருக்கும், சம்பளக்கடன் திட்டத்தில் 3 பேருக்கும், வியாபாரக்கடன் திட்டத்தில் 2 பேருக்கும், மகளிர் சுய உதவிக்குழு கடன் திட்டத்தில் 1 நபருக்கும் ஆக மொத்தம் 20 பேருக்கும், வேளாண்மைத் துறையில், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில் 6 பேருக்கும், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் துணைநிலை நீர் மேலாண்மை முகமை திட்டத்தில் 1 நபருக்கும், தார்பாலின் திட்டத்தில் 2 பேருக்கும், துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தில் 3 பேருக்கும், NADP-Fallow to fertile land திட்டத்தில் 1 நபருக்கும், NADP- திருந்திய நெல் சாகுபடி திட்டத்தில் 2 பேருக்கும் ஆக மொத்தம் 15 பேருக்கும், தோட்டக்கலை துறையில், தேசிய தோட்டக்கலை இயக்கம்-தேனி வளர்ப்பு திட்டத்தில் 2 பேருக்கும், தேசிய தோட்டக்கலை இயக்கம்-வெங்காய சேமிப்பு கூடம் பணி திட்டத்தில் 1 நபருக்கும் ஆக மொத்தம் 3 பேருக்கும், மகளிர் திட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்குதல் பிரிவில் மொத்தம் 5 பேருக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், தட்கல் திட்டத்தில் 12 பேருக்கும், தட்கல்-2020-21 திட்டத்தில் 1 நபருக்கும், சுயநிதி திட்டம்-10000 திட்டத்தில் 2 பேருக்கும், சுயநிதி திட்டம்-25000 திட்டத்தில் 2 பேருக்கும், சுயநிதி திட்டம்-50000 திட்டத்தில் 5 பேருக்கும், சாதாரணவரிசை திட்டத்தில் 2 பேருக்கும், இயல்புவரிசை திட்டத்தில் 1 நபருக்கும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
மேற்படி அனைத்து துறைகளிலும் உள்ள 117 பயனாளிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ரூ.148.73 லட்ச மதிப்பீட்டில், நலத்திட்ட உதவி இன்று வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத்தலைவர் சாந்தி ஜெயராஜ், து.தலைவர் உமா மகேஸ்வரன் , மாவட்ட ஊராட்சி செயலர் ப.பொன்னம்பலம் ,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .குணசேகர் (வ.வ) , செந்தில்குமார் (கி.ஊ) து. வ..வ.அலுவலர் ரவி..ஆகியோர் உடன் இருந்தனர்.
ராஜேஷ் கண்ணன்