அரசு பள்ளி ஆசிரியர்கள் பிளஸ்-1 பாடத்தை நடத்த வில்லை என்பதற்காக அரசு பொதுத்தேர்வு ரத்து செய்வதா?

 அரசு பள்ளி ஆசிரியர்கள் பிளஸ்-1 பாடத்தை நடத்த வில்லை என்பதற்காக அரசு பொதுத்தேர்வு ரத்து செய்வதா?

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார் குற்றச்சாட்டு.....

 தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக

அரசு பொதுத் தேர்வு நடத்தாமல் மாணவர்களை

ஆல் பாஸ் என்று அறிவித்துவிட்டார்கள்

 இந்தச் சூழ்நிலையில்

இந்த ஆண்டும் பதினோராம் வகுப்பு பொது தேர்வு நடத்தாமல் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு அறை மற்றும் 11ஆம் வகுப்பு ஆல்பாஸ் என்று அறிவிக்க  திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மிகவும் வேதனையான செயல்.கல்வியை கேள்விக்குறியாக்கும் நிலை..

 இனி உள்ள இரண்டு மூன்று மாதங்களும் பாடமே நடத்தாமல் அப்படியே விட்டு  விடுவதற்கான திட்டமாக தெரிகிறது.

 மாணவர்கள்  படிக்கவே கூடாது என்று

எண்ணுகிறார்களா என்று என்ன தோன்றுகிறது.

 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்  என்று யார் கேட்டார்கள்?

எதற்காக இந்த திட்டம் என்பதை அரசு விளக்க வேண்டும்..

 தமிழகத்தில் தனியார் பள்ளியில் அதிகமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

 அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்து விட்டோம். இந்தச் சூழலில் 11 வகுப்பு பொதுத்தேர்வு வேண்டாமென்றால் கொஞ்சம் நஞ்சம் படிக்கக்கூடிய மாணவர்களும் சுத்தமாக படிக்காமல் போய்விடுவார்கள்.

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தவில்லை என்றால் அவன் மதிப்பெண் சான்றிதழில் எந்த மதிப்பெண்ணை போடுவீர்கள்..?

 அந்த மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறி ஆக்கப்படும். அவர்களின் திறமை என்னவென்று அவர்களுக்கே தெரியாமல் போகும்.

உயர்கல்வி படிப்பதற்கு பதினோராம் வகுப்பு பாடத்திட்டம் மிக மிக முக்கியம்.

பிளஸ் ஒன் பிளஸ் டூ 2 மதிப்பெண்களை கூட்டித்தான் உயர் கல்வியில் சேர்வதற்கான மதிப்பெண்ணை நிர்ணயிக்க முடியும்.

எத்தனை காலம் தான் நாம் நம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும். இது நாம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் செய்யப்படும் மாபெரும் கேடாகும்.

 சில அரசு பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்த வில்லை என்பதற்காக அவர்கள் கோரிக்கையை ஏற்று தேர்வு நடத்தாமல் இருப்பதற்கான திட்டமா என்பதை விளக்க வேண்டும்

 இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை அரசுக்கு செலுத்தியும் தேர்வு எழுதாமல் அந்த கட்டணத்தை திருப்பியும் தராமல் இருப்பது போல் இந்த ஆண்டும் செய்வதற்கான திட்டமா?

 இந்த ஆண்டும் பொதுத் தேர்வு நடத்த வில்லை என்றால் வருங்காலங்களில் மாணவர்கள் பல்வேறு தகுதி தேர்வு எழுதுவதற்கான தகுதியையும் திறமையையும்

இழந்து விடுவார்கள் என்பதை அரசு அருள்கூர்ந்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அரசு பள்ளிக்கல்வித் துறை தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேசி கருத்துக்கள் கேட்டு அதன்படி நல்லதொரு முடிவு எடுத்தால் அனைவருக்கும் நலம் பயக்கும் என்று நம்புகின்றோம்.

 கடந்த காலங்களில் தேர்வு நடத்தாதே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டாம் நடக்காத அரையாண்டு தேர்வுக்கு விடுமுறை பள்ளியைத் திறக்காதே என்றெல்லாம் அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றிய அரசு இந்த முறையும் தேர்வுகள் நடத்தாமல் இருக்க திட்டம் வைத்துள்ளதை உடனடியாக கைவிட்டு மாணவர்கள் நலன் கருதி அரசு 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது  தேர்வு நடத்துவதை உறுதி செய்திட வேண்டும் என்று தமிழக அரசை,

தேர்வு துறையை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு வேண்டி  கேட்டுக்கொள்கிறோம்.

 தங்கள் உண்மையுள்ள.

கே. ஆர்.நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.