மக்களில் ஒருவராக பிரதமர் மோடியின் தாயார்.....!

மக்களில் ஒருவராக பிரதமர் மோடியின் தாயார்......!

இது நம் பாரத பிரதமர் மோடிஜி அவர்களின் தாயார் மரியாதைக்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரிய திருமதி ஹீராபென் அவர்கள்.

நேற்று உடல்நல குறைவால் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

மகன்கள் மகள்கள் பேரன் பேத்தி, மாமன் மச்சான் உறவுகள் புடைசூழ ஆரவாரம் இல்லை.

தனியார் மருத்துவமனையின் அதிநவீன சொகுசு ஊர்தி இல்லை.

உலகின் உள்ள தலை சிறந்த சிறப்பு மருத்துவர்களை வீட்டிற்கே வரவழைத்து மருத்துவம் பார்க்கும் வசதியும் அதிகாரமும் இருந்தும் ஒரு சாமானிய இந்திய பிரஜை ஒருவரின் தாய் போல ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் அரசு மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெறுவது எல்லாம் நம் நாட்டிற்கு புதிது.

போக்குவரத்தை நிறுத்தி போலீஸ் பேட்ரல் புடைசூழ சைக்கிள் ஊர்வலம் போவதும், நீச்சல் பயிற்சியில் தேர்ந்தவர்கள் சுற்றிலும் கை கோர்த்து பாதுகாத்து நிற்க பாதுகாப்பு கவச உடையுடன் கடலில் குதிப்பதும் தயிர் வெங்காயம் கடைந்து பிரியாணி கிண்டுவதுமே இங்கே எளிமை.

அவர்களை பொறுத்தவரை இவர்கள் பிழைக்க தெரியாதவர்கள்.

இந்த தாய் பெற்றெடுத்த பிள்ளையின் வளர்ப்பு எப்படி என்பதை இந்த ஒரு படமே சொல்லி விடும். இதை எப்போது தான் இந்த தமிழக மக்கள் உணர போகிறார்களோ....

- நல்லினி

Popular posts
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்