LKG., UKGயில் மாணவர் சேர்க்கை கூடாது...?! பள்ளிக்கல்வித்துறை புதிய விளக்கம்...!

LKG., UKGயில் மாணவர் சேர்க்கை கூடாது...?! பள்ளிக்கல்வித்துறை புதிய விளக்கம்...!


அரசுத் தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க பள்ளி கல்வித் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் படிக்கும், 52 ஆயிரத்து 933 குழந்தைகளுக்கு எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளைத் துவங்க திட்டமிடப்பட்டது.


அதன்படி, அரசு அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.யூ.கே.ஜி. வகுப்புகளை தொடங்குவதற்கான அரசாணை கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அரசு அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் மூடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளி கல்வித்துறை தற்போது அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் மூடப்பட இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. அந்த வகுப்புகளை நடத்துவதற்கு தேவையான ஆசிரியர்களை அந்தந்த பணியிடங்களில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

High Light's of the News

  • அரசாணை கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது
  • எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் மூடப்பட இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது
  • தேவையான ஆசிரியர்களை அந்தந்த பணியிடங்களில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த செய்தி வெளியான சமயத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து எல்கேஜி யூகேஜி வகுப்புகளும் மூடப்படும் என்ற வதந்தி பரவியது.
 தனியார் பள்ளிகள் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் நடத்துவதால் தான் அங்கு அதிகமான கூட்டம் சேர்கிறது எனவே அதை ஒழித்துவிட்டால்  அனைவரும் அரசு பள்ளிக்கு வந்து விடுவார்கள் என்கிற எண்ணம் தோன்றியது.

தற்போது பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ள விளக்கம் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.