தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்துக்கு உறுப்பினராக Ex.MP M.S.K.. பவானி ராஜேந்திரன் நியமனம்!
ராமநாதபுரம் பிப்.18
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்துக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை தமிழ்நாடு கவர்னர் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் தலைவராக சென்னையைச் சேர்ந்த ஏ.எஸ்.குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை டாக்டர். மாலதி நாராயணசாமி. ஈரோடு மாவட்டம் நம்பியூர். பி.கீதாநடராஜன், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பி.சீதாபதி, ராமநாதபுரம் மாவட்டம் Ex.MP. M.S.K. பவானி ராஜேந்திரன், திருச்சி மாவட்டம் K.K.நகர் R.ராணி மற்றும் எம்.எல்.ஏக்கள் கே.சிவகாமசுந்தரி, M.வரலட்சுமி, ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு