பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிட: 5 கோடி ஒதுக்கீடு அவசியமற்றதா...?.

பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிட: 5 கோடி ஒதுக்கீடு அவசியமற்றதா...?

பெரியாரின் சிந்தனை தொகுப்பு 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்நூல் பதிப்புகளாக வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் நிதித்துறைமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

2022-23-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் சமூக நீதியை நிலைநிறுத்திடவும், பகுத்தறிவை பரப்பிடவும், பெண் அடிமைத்தனத்தை ஒழித்திடவும் தனது கடைசி மூச்சு உள்ள வரை அயராது உழைத்தவர் பெரியார் என்றும், அவரது சிந்தனைகளும் எழுத்துகளும் காலத்தை வென்று இன்றும் கூட ஒளிர்வதாகவும் கூறினார்.

மேலும், தனித்துவமிக்க அவரது எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்துச் சென்று, அவரது முற்போக்கு சிந்தனையால் அனைவரும் பயனடைய வைப்பது அரசின் கடமையாகும் என்று கூறிய அவர், இதை நிறைவேற்றும் விதமாக பரிந்துரை குழுவின் பரிந்துரைப்படி, பெரியாரின் சிந்தனை தொகுப்பு 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்நூல் பதிப்புகளாக வெளியிடப்படும் என்றும், இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதற்குத்தான் திராவிடர் கழகம்  இருக்கிறது தந்தை பெரியார் உருவாக்கி வைத்த அறக்கட்டளையில் பல  ஆயிரம் கோடிகள் உள்ளது.  அது கற்பக விருட்சமாக ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகளை அவர் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள் மூலம் அள்ளிக் கொடுத்துக் கொண்டுள்ளது. 

அந்தப் பணம் முழுவதும் கருப்பு சட்டை அணிந்த கயவர்கள்  கையில் மாட்டிக் கொண்டுள்ளது.  அதிலிருந்து ஐந்து கோடி  என்ன 500 கோடி கூட எடுத்து செலவு  செய்யலாமே தமிழக அரசுக்கு ஏன் இந்த வீண் வேலை.....?

ஏற்கனவே  பெரியார் பிஞ்சுகள் அச்சிட்டு வைத்துள்ள பல ஆயிரம்  புத்தகங்கள் வீணாக கிடக்கின்றன.  இந்த நிலையில் தமிழக அரசு எடுக்கும் இந்த புதிய முயற்சி எடுபடுமா....?

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்