வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கிறதா? இராதாபுரம் சபாநாயகர் தொகுதி காவல்துறை

 வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கிறதா? இராதாபுரம் சபாநாயகர் தொகுதி காவல்துறை


நெல்லை மாவட்டம், இராதாபுரம் தாலுகா பெரும்பான்மையாக பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியாகும் மேலும் இராதாபுரம் சட்டமன்றம் சபாநாயகரின் தொகுதியாகும் இராதாபுரம் காவல் சரகம் வள்ளார்குளம் ஊரைச் சார்ந்த பட்டியல் சமூகத்தைச் சார்ந்த தில்லை தங்கராஜ் என்பவரின் வீட்டின் அருகே உள்ள இடத்தை அபகரிக்கும் நோக்கில் ஐயப்பன் என்பவரின் தலைமையிலான நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று நேற்று (22-3-2022) மாலையில் தில்லை தங்கராஜை வீடு புகுந்து தாக்கியுள்ளது இதில் நிலைதடுமாறிபோன தில்லை வலி தாங்கமுடியாமல் இராதாபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அட்மிட் ஆனார் இந்த சம்பவம் தொடர்பாக தில்லையிடம் வாக்குமூலம் பெற சென்ற இராதாபுரம் காவல்நிலையத்தைச் சார்ந்த இரண்டு காவலர்கள் பாதிக்கப்பட்டதில்லை சொன்ன வாக்குமூலத்தை பதிவு செய்ய முடியாது? ஐயப்பனை சேர்க்க மாட்டோம் என வாக்குமூலம் பெறாமல் மருத்துவமனையில் இருந்து சென்றுவிட்டனர் சபாநாயகர் தொகுதியிலே வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை இராதாபுரம் காவல்துறை பாதுகாப்பது பட்டியல் சமூக மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாக உள்ளது நேர்மையான காவல்துறை உயர் அதிகாரிகள் மேற்படி சம்பவத்தை முறையான விசாரணை செய்து தில்லையை தாக்கி  வன்கொடுமை நிகழத்திய குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் போராட தூண்டாதே!!

இவண்,

தலித் கூட்டமைப்பு,

நெல்லை மாவட்டம்//