தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில கோரிக்கை மாநாடு கடலூரில்.....

தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில கோரிக்கை மாநாடு கடலூரில்.....



தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில கோரிக்கை மாநாடு.....கடலூரில் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி சனிக்கிழமை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்..

இம்மாநாட்டில் மாண்புமிகு எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில்.,.. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சி. வே. கணேசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

இம்மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பெருமக்கள் தமிழகம் முழுதும் உள்ள அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகள் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்.

அதற்கான திட்டமிடல் நிகழ்ச்சியில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சி.வே.கணேசன் அவர்களை சந்தித்து பேசிய போது எடுத்த படம்..

K.R. Nandhakumar.State General Secretary