நிவேதிதா மீனவ மகளிர் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா

நிவேதிதா மீனவ மகளிர் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா


ராமநாதபுரம் மார்ச்-14

ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் தீவு தங்கச்சிமடத்தில் நிவேதிதா மீனவ மகளிர் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா.பெண்கள் உயர்வே நாட்டின் உயர்வு என்ற தலைப்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதலில் தமிழ் தாய் வாழ்த்துடன், ராமநாதபுரம் மூத்த வழக்கறிஞர் ரவிச்சந்திரன் ராமவன்னி, வரவேற்புரை நிகழ்த்த,நிவேதிதா அறகட்டளை தலைவி கே.இருதய மேரி தலைமையேற்க, நிவேதிதா அறக்கட்டளை துணை தலைவி தர்மசீலி,

முன்னிலை வகிக்க உலக மகளிர் தின விழா இனிதே கொண்டாடப்பட்டது. நிவேதிதா அறக்கட்டளை பொருளாளர் கர்லோ பா ஆண்டறிக்கை வாசித்தார்,பங்குத் தந்தை சுவாமிநாதன் ஆசியுரை வழங்கினார்.இதனை அடுத்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், மாவட்ட அயலக அணிதுணை அமைப்பாளர் அப்துல்காதர் (எ) ஜான் மரைக்காயர், வழக்குரைஞர் முனியசாமி,உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், அன்னாள் மேல்நிலைப்பள்ளி அருட்சகோதரி பிரகாசி,அறிவியல் அறிஞர் நிர்மலா, ராமநாதபுரம் சித்த வைத்திய மருத்துவர் சுஜாதா,முதியோர் அமைப்பு அறங்காவலர் வள்ளியம்மை, தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் குயின் மேரி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறக்கட்டளை பொறுப்பாளர் நசீமா, சமுதாய செயலாளர் சேசுராஜா, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்  ஆகியவை நடைபெற்றன. சிறப்புரையாற்ற வருகை தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு அறக்கட்டளை தலைவர் இருதய மேரி நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.இதில் மீனவர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு