தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் ...
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 9-அம்ச கோரிக்கைகளை தமிழக அரசை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை எதிரேநடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கர் தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்சரவணன், தலைமை வகித்தார்
மாவட்ட செயலாளர் கோபாலகண்ணன். மாவட்ட இணைச் செயலாளர் குணசேகரன்.
மாவட்ட துணைத் தலைவர் ஜேம்ஸ்குமார். ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்
ஊரக வளர்ச்சித் துறையின் மீது பிற துறை பணிகளை திணி பதையும்,
கால அவகாசம் இன்றி திட்டப் பணிகளை முடிப்பதற்கு அளிக்கப்படும் கடுமையான நிபந்தனைகளை கைவிடவும்.
அலுவலக நேரங்கள் கடந்த பின்பு நடைபெறும் ஆய்வு கூட்டங்கள் மற்றும் இரவுநேர ஆய்வு கூட்டங்களை கைவிடக் கோரியும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையிலிருந்து உதவி இயக்குனர் நிலையை நிலையிலான பதவி உயர்வு ஆணைகள் மேலும் காலதாமதமின்றி உடனடியாக வழங்குதல் கோரியும்
மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களும் வழங்கி உரிய அரசாணைகள் வெளியிடுதல் உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்ட முடிவில் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி