பள்ளி பொதுத்தேர்வு - மனம் திறந்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!

 பள்ளி பொதுத்தேர்வு - மனம் திறந்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!


6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டுமே மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.


பள்ளி மேலாண்மைக் குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலான பரப்புரை தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது. மேலாண்மைக் குழுவை மேம்படுத்தும் வகையில் "நம் பள்ளி நம் பெருமை" என்ற புதிய செயலி ஒன்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

இதற்கு பின்னர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்யவும், மேலாண்மை குழுக்களின் அவசியம் பற்றி பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. பெற்றோர் - ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையீடு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டுமே மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும்.

அடுத்த கல்வியாண்டு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 கொரோனா காரணமாகவே தேர்வுகளில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல ஏப்ரல் மாதத்திலேயே தேர்வு நடத்தி முடிக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதல் மாணவர் சேர்க்கை நடந்துள்ள நிலையில் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை அதிகரிப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

 டெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள தேர்வர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும். பெற்றோர்- ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தலையிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்