பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை 30 நாட்கள் மட்டுமே...!

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை 30 நாட்கள் மட்டுமே...!

தமிழக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டதால் நடப்பு கல்வி ஆண்டிற்கான கோடை விடுமுறை நாட்கள் மிகவும் குறைவாக உள்ளது. இது தொடர்பாக பள்ளிகல்வித்துறையின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்புகள் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், பாதுகாப்பு நலன் கருதி மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டது. இதனால் அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் முறையில் மட்டுமே நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்த சமயங்களில் கொரோனா அலை அதி தீவிரமாக இருந்தது. இதனால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டில் மாணவர்களுக்கு முன்னெச்சரிகை நடவடிக்கையாக கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதனால் மாணவர்களுக்கு அச்சமின்றி பொதுத்தேர்வுகளை திட்டமிட்ட படி நடத்த முடியும். இதனால் 12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதே போல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையும் 10 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது. இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு வருகின்றனர்.

மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு மே 13ம் தேதி இறுதி வேலை நாள் என்றும், அடுத்த கல்வியாண்டிற்கான பள்ளிகள் ஜூன் 13ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். இதனால் மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் குறைவாக உள்ளதாக அனைத்து தரப்புகளிலும் புகார்கள் எழுந்தது. இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை நேரடி வகுப்புகள் பெருந்தொற்று காரணமாக மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டது, இதனால் தேர்வுகளும் வழக்கத்தை விட தாமதமாக நடத்தப்படுவதால் கோடை விடுமுறை 30 நாட்கள் விடுவதாக தெரிவித்துள்ளது



Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்