முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!
முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!!
ராம நவமி பேரணிகளின் போது குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பீகார், கோவா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ராம நவமி ஊர்வலங்களின் போது நடத்தப்பட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் நாடு தழுவிய முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்களுக்கான இந்துத்துவா அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். ஹரித்வாரிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் இந்துத்துவ நிகழ்ச்சிகளில் இனப்படுகொலைக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது இதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 15-4-2022 காலை 10 மணி அளவில் இராமநாதபுரம் மாவட்டம் அரசு பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் சேக் தாவுது தலைமை ஏற்று நடத்தினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சஹீத் கண்டன கோஷமிட்டார், மேலும் SDPI கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் மற்றும் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நூர் ஜியாவுதீன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மேலும் ஆர்ப்பாட்டத்தில்
விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தோழர். முகமது யாசின், பெரியார் பேரவை. தலைவர் தோழர்.நாகேசுவரன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. மாவட்ட செயலாளர் ராஜீக் ரகுமான் ,எஸ்டிபிஐ கட்சி கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர் தலைவர் முகமது கனி நன்றியுரை நிகழ்த்தினார். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி