ஓசூர் மக்கள் நடைப்பயிற்சி செய்ய ஐந்து இடங்கள்: மாவட்ட எஸ்.பி. உத்தரவு...!
ஒசூரில் ஞாயிறு காலை 6 மணி முதல் 9 மணிவரை (3மணிநேரம்) போக்குவரத்து இல்லாத சாலைகளில் சைக்கிளிங், நடைப்பயிற்சி செல்ல போலிசார் சிறப்பு ஏற்பாடு
ஒசூர் நகர காவல் ஆய்வாளர் விஜயகுமார் அவர்கள் தெரிவிக்கையில்:
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி திரு.சரோஜ் குமார் தாகூர் அவர்களின் உத்தரவின்படி, ஒசூர் டிஎஸ்பி சிவலிங்கம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்
ஞாயிறுகள் தோறும் ஒசூர் மாநகரில் காலை 6 மணி முதல் 9 மணி வரை முக்கிய 5 இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு நடைப்பயிற்சி, சைக்கிளிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.. மன அழுத்தம் குறைந்து அமைதியை பொதுமக்கள் உணரும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்..
ஐந்து இடங்கள்;
1.மத்திகிரி ஜங்ஷன் முதல் அந்திவாடி ஸ்டேடியம் ஜங்ஷன்
2.தர்கா முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து வென்ட் இந்தியா கம்பெனி.
3 கொத்தூர் ஜங்ஷன் இருந்து டிவிஎஸ் ரோடு ஜங்ஷன் வரை.
4 சப் கலெக்டர் ஆபீஸ் முதல் சென்ட்ரல் எக்சைஸ் லேக் ரோடு.
5 பத்தல பள்ளி ஜங்ஷன் இருந்து காளிகாம்பாள் கோவில் ஜங்ஷன் வரை.
ஓசூர் செய்தியாளர்: E.V. பழனியப்பன்