இந்திய அளவில் முதலிடம் பெற்று திகழும் வேலூர் வி.ஐ.டி. பல்கலை கழகம்

இந்திய அளவில் முதலிடம் பெற்று திகழும் வேலூர் வி.ஐ.டி. பல்கலை கழகம்



உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் அதன் கல்வித்தரம், மாணவர் ஆசிரியர் விகிதம், ஆசிரியர்கள் பெற்ற விருதுகள், சாதனைகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தரம் பிரித்து ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் தரவரிசை பட்டியலை க்யூ.எஸ் என்ற சர்வதேச நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

முக்கியமாக கலை, பொறியியல் & தொழில்நுட்பம், லைப் சயின்ஸ் & மருத்துவம், இயற்கை அறிவியல் & சமூக அறிவியல் மற்றும் மேலாண்மை போன்ற 5 பாடப்பிரிவுகளில் ஆண்டுதோறும் உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த வருட தரவரிசைப் பட்டியலில் உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலக அளவில் விஐடி 346வது இடம் பிடித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டை விட 55 இடங்கள் முன்னேறியுள்ளது. அதேபோல் தேசிய அளவில் 9வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் க்யூ.எஸ் பட்டியலில் விஐடியின் 7 பாடப்பிரிவுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்பர்மேஷன் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பாடப்பிரிவுகள் தேசிய அளவில் தரவரிசை பட்டியலில் 8ம் இடம் பிடித்துள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்பர்மேஷன் சிஸ்டம் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவு கடந்த ஆண்டை விட 50 இடங்கள் முன்னேறி உள்ளது. 2021ம் ஆண்டு ஷாங்காய் தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் விஐடி 9ம் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் இந்திய அளவில் என்ஐஆர்எப் தரவரிசை பட்டியலில் சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் தரவரிசை பட்டியலில் விஐடி 12ம் இடத்தில் உள்ளது. இந்திய அரசின் இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ் என்ற அங்கீகாரத்தை விஐடிக்கு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    _   Dr. T. ராஜசேகர் .Sub-Editor