சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தனிமனிதராக K.Pமுனிசாமி போராட்டம்
*ஒசூர் அருகே 3000 ஏக்கர் நிலத்தில் சிப்காட் அமைக்க தமிழக அரசு விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை கைவிட வலியுறுத்தி சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்..
வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகமங்கலம்,உத்தனப்பள்ளி,அயர்ணப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 5வது சிப்காட் அமைக்க அரசு முயற்சி கொள்வதால் விளைநிலங்கள் பறிபோவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்
இந்தநிலையில் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் K.P.முனுசாமி 7 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் விவசாய நிலங்களை விற்றுவிட்டு விவசாயத்துக்குத் தகுதி இல்லாத மேட்டு நிலங்களில் சிப்காட் அமைக்கலாம் அதற்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். தனி ஒரு நபராக அவர் போராட்டத்தில் குதித்து உள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்: மூர்த்தி