LKG க்கு ஒரு வருடத்திற்கு ஆயிரம் ரூபாய்தான் கட்டணம் I to Vth க்கு 1350 ரூபாய் மட்டுமே கட்டணம்...! போராட வாருங்கள் பள்ளி நிர்வாகிகளே...!!
பள்ளி நிர்வாகிகளுக்கு அன்பு வேண்டுகோள்....
அனைவருக்கும் இனிய வணக்கம்...
தனியார் பள்ளிகள் வாழ்வா சாவா என்ற நிலையில் நாம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நான் நம்புகின்றேன்.
பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெற சான்றுகள் பெற பள்ளி வாகனங்களை இயக்க பல்வேறு வரிகள்...லஞ்சம்.....
மன உளைச்சல் பெற்றோரிடம் நியாயமான கட்டணம் வசூலிக்க முடியவில்லை..
பெற்றோர்கள் நம்மை பார்த்து பயந்த காலம் போய்.....நாம் பெற்றோர்களைப் பார்த்து பயந்து கொண்டு இருக்கிறோம்..
படித்த காலத்திற்கான கட்டணம் செலுத்த மறுக்கிறார்கள்..
டீ.சி இல்லாமலேயே வேறு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாள்தோறும் சென்று கொண்டிருக்கிறது.
கல்வி கட்டண நிர்ணயக் குழு நியாயமான போதுமான கட்டணம் நிர்ணயிப்பதில்லை.
அரசு பள்ளிகளுக்கு வெண்ணையும் தனியார் பள்ளிகளுக்கு சுண்ணாம்பும் தடவும் வேலையை அரசு செய்து வருகிறது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு எண்ணற்ற சலுகைகள்...
அதே படத்தை தனியார் பள்ளியில் படிக்கிற மாணவனுக்குரிய சலுகைகள்தர மறுப்பு ...
அதிகாரிகளோ நம்மை அலைக்கழிக்க விடுகிறார்கள்... ஆணவமாய் நடத்துகிறார்கள்.
ஒரு பைசா கூட அரசிடமிருந்து நிதி உதவி நமக்கு கிடைப்பதில்லை.
தர வேண்டாம்...
நமக்கு தர வேண்டிய ஆர்.டி.இ.கல்வி கட்டண பாக்கியையாவது ஒழுங்காக தரலாம்.
சொத்துவரி கேட்டு பல இடங்களில் ஜப்தி செய்கிறார்கள்... பள்ளிகளுக்கு சீல் வைக்கிறார்கள்..
100 சதவீத சொத்து வரி உயர்வு சென்ற ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துவிட்டது..
காலி இடங்களுக்கு விளையாட்டு மைதானங்களுக்கு எல்லாம் 100% சொத்துவரி உயர்த்தி போட்டுள்ளார்கள்...
அங்கீகாரம் தர மறுக்கிறார்கள். எஃப்சி செய்ய லஞ்சம், அங்கீகாரம் தொடர் அங்கீகாரம் பெற லஞ்சம், என அலைக்கழிப்புகள் ஆயிரம்..
என்ன செய்யப்போகிறோம் ? இன்னும் எத்தனை காலம் அமைதி காக்க போகிறோம்.?
ஒன்று போராடி வெற்றி பெற வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெற வேண்டும்.
லட்சக்கணக்கில் லஞ்சமாக செலவிடும் பள்ளி நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லாமல் சங்கத்தின் ஆண்டு சந்தாவை கூட செலுத்தாமல் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை மனிதரைப் போல் கண்டுகொள்ளாமல் இருந்தால் பாதிப்புகள் வரும்போதுதான் தெரியும்...
கடந்த காலங்களில் சமச்சீர் கல்விக்கு எதிராகவும் கல்வி கட்டண நிர்ணயக் குழுவுக்கு எதிராகவும் நமது சங்கம் போராடியபோது....
நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தராமல் ஒற்றுமையோடு போராடாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததால் தான் நமக்கு இவ்வளவு கஷ்டம் இன்றைக்கும் உள்ளது..
எனவே இது நமது வாழ்க்கை பிரச்சனை....
தயவு செய்து நமது ஒற்றுமையை காட்டுவதற்கு பள்ளி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் ஒருநாள் சென்னைக்கு...
பள்ளி கல்வி இயக்குனரகத்தில் உள்ள தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய குழு அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பரிப்போம் வாரீர்.....
கோரிக்கை மனுக்களை தரவும் அரசு....,நம்மோடு பேசட்டும் நல்லதொரு தீர்வு காண்போம்..
கல்வி கட்டணம் குறையக் குறைய நமக்கு வரவேண்டிய ஆர்.டி.இ.கல்வி கட்டணமும் குறையும் என்பதை கடந்த காலங்களில் பார்த்தோம்... அது தொடர்கதையாக வேண்டுமா ?.
அரசு ஒரு மாணவருக்கு 45 ஆயிரம் ரூபாய் செலவழிக்கிறது. நமக்கு ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் பிச்சை போடுவது போல் கல்வி கட்டணம் நிர்ணயிக்கிறார்கள்.
ஆண்டுக்கு 10% கல்விக் கட்டணம் உயர்த்தி தரவேண்டும்...
அதையும் செய்யாமல்.…
எந்தவித செலவினங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல்...,
ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதாச்சாரத்
தையும் எண்ணிக்கையையும் குறைந்து கொண்டே இருக்கிறார்கள் .
தமிழகத்திலே பொறியியல் மருத்துவம்கலை அறிவியல் பாலிடெக்னிக் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் பாலிடெக்னிக் ஐ.டி.ஐ உட்பட அனைத்திற்கும் இதேபோல் நீதியரசர் ஒரே மாதிரி கட்டணம் நிர்ணயித்துக் கொடுத்துள்ள போது
தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஒவ்வொரு பள்ளிக்கும்
ஒரு தனி கட்டணம் நிர்ணயிப்பது எந்த வகையில் நியாயம் ?
எனவே தமிழக அரசு கல்விக்காக ஒரு மாணவனுக்கு என்ன செலவு செய்கிறதோ அதையே தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணமாக நிர்ணயம் செய்து தந்தால் அச்சமின்றி
நட்டமின்றி பள்ளிகளை நடத்திட முடியும் ..
இனிமேல் தமிழகத்தில் எந்த பள்ளியும் அதிக கட்டணம் வாங்கி பள்ளிகளை நடத்த முடியாது என்பதை தனியார் பள்ளி நிர்வாகிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்....
அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் பத்திரிகையாளர்
களும் சமூக விரோதிகளும் உங்களை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்...
வருங்காலம் உங்களுக்கு
வசந்தகாலம் அல்ல பிரச்சினை
களுக்குரிய காலம் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம்..
உங்கள் பள்ளிகள் மீது பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன...
உங்களுக்கு என்றும் பக்கபலமாக நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் இருக்கும்..
உங்களுக்காக குரல் கொடுக்கும்..
தரமான கல்விக்கு தன்னிகரில்லா தனியார் பள்ளிகள் நாம் என்பதை நிரூபிக்க நியாயமான கல்வி கட்டணங்கள் நிர்ணயிக்க வேண்டி
வருகின்ற 19.04.2022 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு DPI கல்வி கட்டண நிர்ணயக் குழு அலுவலகம் முன்பு அனைத்து பள்ளி நிர்வாகிகளும் நேரடியாக வரவேண்டும்.
நீங்கள் இருந்து பாடம் நடத்த போவதில்லை.
ஒரு நாள் வந்து போனால் ஒன்றும் நஷ்டம் இல்லை.
நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்.
தனித்தனி சங்கங்களாக பிரிந்துபோய்
தனித்து இருந்தால் நாம் இனி வெற்றி பெற முடியாது..
பெரிய பள்ளிகள் சிறிய பள்ளிகள் என்ற பேதமெல்லாம் மறந்து அனைவரும் ஒன்றுபட்டு வரும் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் பிரைவேட் ஸ்கூல் பீஸ் டிடர்மினேஷன் கமிட்டி, டிபிஐ வளாகம், சென்னையில் கூடி நீதியரசருடன் நமது கோரிக்கைகள் குறித்து பேசுவோம்...
வெற்றி பெறுவோம் வாருங்கள்...
ஒவ்வொரு பள்ளி நிர்வாகி உங்கள் ஊரில் உள்ள அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் தகவல் தந்து ஒருவரைக் கூட விட்டுவிடாமல் சென்னைக்கு அழைத்து வாருங்கள்..
நமது சக்தி எது என்பதை அரசுக்கு காட்டுவோம்...
நாமும் வாக்காளர்கள் தான் திமுகவுக்கு வாக்களித்த உண்மையான வாக்காளர்கள்
நாம் என்பதை மறந்துவிடாமல் அரசின் கவனத்தை ஈர்க்க வரும்
19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பள்ளி நிர்வாகிகள் அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்..
கல்வி கட்டண நிர்ணய குழுவுக்கு இந்தாண்டு விண்ணப்பிப்பதற்கு கடைசிநாள் 20ஆம் தேதி......நீங்கள் அனைவரும் 19 ஆம் தேதியே உங்கள் பள்ளி கல்விக்கட்டணம் சம்பந்தமான கோப்புகளை எடுத்து கொண்டு நேரில் வந்து நீதி அரசருடன் கொடுக்க வாருங்கள் என்று அன்போடு அழைக்கின்றேன்.
உங்கள் வருகைக்காக வழிமேல் விழி வைத்து இருகரம் கூப்பி காத்திருக்கும்..
உங்கள்
கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்..