கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள கிருஸ்த்துவ சபைகளில்ஆராதனை நடத்தக்கூடாது என மிரட்டும் இந்து முன்னணியினர்.
கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள கிருஸ்த்துவ சபைகளில்ஆராதனை நடத்தக்கூடாது என மிரட்டும் இந்து முன்னணியினர் மீது கிறிஸ்துவ முன்னணியின் மாநிலத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்அளித்துள்ளனர்.
கிறிஸ்தவ முன்னணி இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான சரவணன், மற்றும் பாதிக்கபட்ட கிறிஸ்துவ அமைப்பினர்.
மாவட்ட ஆட்சியரகத்தில்
மாவட்ட வருவாய்அலுவலரை சந்தித்துமனு அளித்தனர்
இதுகுறித்து கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் சரவணன் தெரிவிக்கையில்
தொடர்ந்து தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் இந்துத்துவா அமைப்பினர் கிறிஸ்தவ அமைப்பினர் மீது தாக்குதல் நடத்திக் கொண்டே உள்ளனர் இதனால் பல சபைகள் மூடப்பட்டு பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து முன்னணியைச் சார்ந்த கலை கோபி என்பவர் பல கிறிஸ்தவ ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ படமெடுத்து அத்துமீறி சபை நடத்துவதாக இவர்கள் புகார் கூறி தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்துக் கொண்டே வருகிறார்கள்
சொந்தமாக ஆலயம் கட்டி சபை நடத்தும் இடங்களில் சபை நடத்தக்கூடாது ஆராதனை செய்ய கூடாது எனக்கூறி கிறிஸ்தவர்கள் இந்த நாட்டிலேயே இருக்கக்கூடாது என அச்சுறுத்தி வருகின்றார்கள் இது சம்பந்தமாக மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு அளித்துள்ளோம் தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்த ஆட்சியில் நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் இப்படிப்பட்ட இந்துத்துவா அமைப்பினர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே வருகிறார்கள் எனவே இனியும் மௌனமாய் இராமல்உடனடியாக தலையிட்டு கிறிஸ்துவ ஆலயங்களுக்கும் கிறிஸ்துவ அமைப்பினருக்கும் பாதுகாப்பு தரும்படியாக ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் குரலாக நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் நாங்கள் யாரையும் கட்டாய மதமாற்றம் செய்யவில்லை இந்துத்துவ அமைப்பினரே பொய்யான ஒரு புகாரை தயார் செய்து நாங்கள் மதம் மாற்றுவதாக கூறி புகார் அளித்து எங்கள் மேல் நடவடிக்கை எடுக்க கூறி
காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்து வருகின்றனர்
எனவே நாட்டின் அமைதியை கெடுத்து மத கலவரத்தை உருவாக்க முயற்சி செய்யும் இந்துமுன்னணிஅமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால்.
தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது பாதிக்கப்பட்ட அப்போஸ்தல ஐக்கிய சபை போதகர் ஆலான் ஆபேல்
.கிறிஸ்துவ முன்னணியின் மாவட்ட தலைவர் ராஜேஷ்.போதகர் டேனியல் சக்கரவர்த்தி.விடுதலை சிறுத்தைகள் மாவட்ட அமைப்பாளர் துரைமுனுசாமி உள்ளிட்ட ஏராளமானோர்பங்கேற்றனர்.
பேட்டி:சரவணனன்.
கிருஸ்துவ முன்னனி அமைப்பின் மாநிலதலைவர்.
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி