தேன்கனிக்கோட்டை தொ.மு.ச. நிர்வாகிகளின் அராஜகம் அத்துமீறல்...!?
அரசு போக்குவரத்து கழகம் தேன்கனிக்கோட்டை கிளையில் LPF .தோ.மு.ச சங்கத்தின் தலைவர் இராமச்சந்திரன்.செயலாளர் மோகன் ஆகியோர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆக பணியாற்றுபவர்கள் இடம் பேருந்துகளை ஒதுக்குவதற்கு ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் கேட்கும் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கி வருகின்றனர்.
இது கூட திமுகவைச் சார்ந்த ஊழியர்களுக்கு மட்டும் தான் இந்த வாய்ப்பு மற்ற சங்கத்தை சார்ந்தவர்கள் மணிக்கணக்கில் காத்து இருந்தாலும் அவர்களுக்கு வாகனங்களை ஒதுக்குவது இல்லை.
அப்படி ஒரு நாள் முழுக்க காத்திருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு வண்டி என்றும் வருமானமே இல்லாத டவுன் பஸ்சை பார்த்துதான் ஒதுக்குகிறார்கள் அதற்குக் கூட மணிக்கணக்கில் காத்திருந்து அவர்களிடம் வேண்டி காலில் விழுந்து பணி வாங்க வேண்டிய கட்டாயம் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சில சமயங்களில் மணிக்கணக்கில் நிற்க வைத்து கால்கடுக்க காத்திருக்க வைத்து இன்றைக்கு டூட்டி இல்லை லீவு போட்டு வீட்டுக்கு போ என்று அலைக்கழிக்கின்ற நிலையும் ஏற்பட்டு வருகிறது.
தொமுச நிர்வாகிகளுடன் சேர்ந்து கொண்டு அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டாளர் ஷானவாஸ் செய்யும் அராஜகத்திற்கு அளவே இல்லை. இதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று மற்ற தொழில் சங்கத்தைச் சார்ந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கூறுகின்றனர்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களும் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களும் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தளி தொகுதி செய்தியாளர் சந்திரசேகர்