"வாலாஜா அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் லாரி மோதி தலை நசுங்கி சாவு!!!!
வாலாஜா அடுத்த சுமைதாங்கி கிராமம்புதுத்தெருவை சேர்ந்தவர்
ராதாகிருஷ்ணன்(70).
இவர் கிராமத்தில் சொந்த நிலம் வைத்து விவசாயம்செய்து வருகிறார். இந்த நிலையில்
இன்று காலை 7 மணி அளவில் பாகவளியில் இருக்கும்
தனதுசொந்த நிலத்திற்கு
சென்று விட்டு பிறகு
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்வவிநாயகர் கோவில் அருகே சாலையை கடக்க முயன்ற போது
திருச்சிராப்பள்ளிமுசிறிவடுகபட்டி கிராமத்தை சார்ந்த பாலச்சந்தர்-(30) என்பவர்
டிப்பர் லாரியில் எம்சென்ட் மணலை ஏற்றிக்கொண்டு
மிகஅதிவேகமாக வேகமாகவந்து கொண்டிருந்தார்.
அப்போது சாலையின் ஓரம்
செல்வவிநாயகர் கோவில்
அருகாமையில் நின்று
கொண்டிருந்த முதியவர்
ராதாகிருஷ்ணன் மீது லாரி
மோதி உள்ளது.
இதில் முதியவர் உடல் தலை பாகங்கள் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக அருகே உள்ள ஊர் பொதுமக்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல்
கொடுத்து அதன் பேரில்விரைந்து வந்த காவேரிபாக்கம் காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் ஏராளமான காவல்துறை அதிகாரிகள்
சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு உடல்நசுங்கி கிடந்த முதியவரின் உடலை ஆட்டோ மூலம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுசென்றனர்.
ஒரு சாலையை கடக்க முயன்றமீதுலாரிஏற்றிநசுக்கிய சம்பவம் சுமைதாங்கி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது...
ராணிப்பேட்டை செய்திகளை சுரேஷ்