கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்!
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சார்பாக ஏழு நாட்களுக்கான சிறப்பு முகாமில் தொடக்கவிழா ஏர்வாடி சமுதாய கூட்டத்தில் 19.5.22 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் Dr.E. ராஜபுதீன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் Dr.A.A. சதக்கத்துல்லா தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக முகமது சதக் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் Dr.A. அலாவுதீன் மற்றும் முகமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் Dr.N முகம்மது ஷரீப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இம்முகாம் குறித்து கல்லூரி முதல்வர் Dr.E. ரஜபுதீன் பேசுகையில் இம்முகாம் சார்பாக ஏர்வாடி மக்கள் பயன்பெறும் வகையில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விழிப்புணர்வு, ஆரோக்கிய வாழ்வில் யோகாவின் அவசியம், பிளாஸ்டிக்கின் தீமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இலவச கண் மருத்துவ முகாம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் வரும் ஏழு நாட்களில் நடைபெற உள்ளது. ஆகவே அனைத்து பொதுமக்களும் இந்நிகழ்வில் எங்கள் கல்லூரி மாணவ மாணவிகளோடு பங்கு கொண்டு பயன்பெற வேண்டும் என எடுத்துரைத்தார்.
இந்நிகழ்விற்கு ஏர்வாடி ஊராட்சி மன்றத்தலைவர் செய்யது அப்பாஸ், ஏர்வாடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாடசாமி ஊராட்சிமன்ற எழுத்தர் ஜெயராமன், ஏர்வாடி ஜமாத் பிரமுகர் ருக்னி தீன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் N.சுலைமான் மற்றும் S.முகம்மது அஜீஸ் மற்றும் செல்வி. S. சக்தி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
ராமநாதபுரம் நிருபர் M.N. அன்வர் அலி, N.A. ஜெரினா பானு