தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர விழிப்புணர்வு பேரணி
ஒசூரில், ரோட்டரி கிளப் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர விழிப்புணர்வு பேரணியை மாநகர மேயர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, அரசுப்பள்ளி மைதானத்தில் ரோட்டரி கிளப் சார்பில் சாலை விபத்துக்களில் ஏற்ப்படும் உயிரிழப்புக்களை தடுக்கும் விதமாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது
ஓசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்
இருசக்கர வாகனங்களில், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து முக்கிய சாலைகளில் விழிப்புணர்வு மேற்க்கொண்டனர்.
Hosur Reporter : E.V. Palaniyappan