தர்மபுரியில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில் நேரத்தை மாற்றக் கூடாது: ஓசூர் மக்கள் கோரிக்கை....

தர்மபுரியில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில் நேரத்தை மாற்றக் கூடாது:  ஓசூர் மக்கள் கோரிக்கை....


தர்மபுரியிலிருந்து ஓசூர் வழியாக பெங்களூருக்கு 06278 என்ற எண் கொண்ட பாசஞ்சர் ரயில் சென்று வருகிறது. ஓசூரிலிருந்து வேலைக்கு செல்வோர் உள்பட பல்வேறு தரப்பினர் 1,000-க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் நாள்தோறும் பெங்களுர் செல்கின்றனர். தற்போது தர்மபுரியிலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு ஓசூர் வழியாக பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்தை காலை 8.10 மணிக்கு சென்றடைகிறது.

இந்தநிலையில், வருகிற திங்கட்கிழமை முதல்,  தர்மபுரியிலிருந்து காலை 5 மணிக்கு பதிலாக  6.30 மணிக்கு புறப்பட்டு பெங்களுருக்கு காலை 10 மணியளவில் சென்று சேர்வதாக,  ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள், தொழிலாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்படுவதாகவும் கவலை அடைந்துள்ளனர். இதையடுத்து, , ஓசூர் ரயில் நிலையத்தில், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரனிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கி, அதில் ரயில் நேரத்தை மாற்றக்கூடாது. தற்போதுள்ள நேரமே தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், இது சம்பந்தமாக ரயில்வே துறை அதிகாரிகளிடம் பேசி, தற்போதுள்ள நேரமே தொடர ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

Hosur Reporter: E.V. Palaniyappan.

Popular posts
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்