ஆறு லட்சம் மதிப்பில் பயணிகள் நிழல்கூடம் : தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

ஆறு லட்சம் மதிப்பில் பயணிகள் நிழல்கூடம் : தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.


ஆறு லட்சம் மதிப்பில் பயணிகள் நிழல்கூடம் அமைக்க தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பிதிரெட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட கெலமங்கலம் திலிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் 6 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழல் கூடம் அமைக்க இன்று பூமி பூஜை நடைபெற்றது.


 பிதிரெட்டி ஊராட்சி தலைவர் பைரப்பா தலைமையில் நடைபெற்ற இப்பூமி பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சீனிவாஸ் மற்றும் ஊராட்சி கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 தளிஒன்றிய கவுன்சிலர்கள் பிரசாந்த் சென்னீரப்பா பஞ்சாயத்து தலைவர்கள் கிருஷ்ணப்பா, ஆனந்த், சிபிஐ கெலமங்கலம்  நகர செயலாளர் கெவி.நாகராஜ், பிஜேபி ஒன்றிய செயலாளர் செந்துரு, மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கவுன்சிலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

 ஓசூர்  செய்தியாளர்: E.V.பழனியப்பன்