விடியா திமுக அரசை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம்,மாவட்ட அஇஅதிமுக சார்பில் விடியா திமுக அரசை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பு வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை தமிழக மக்களே வாழ்த்தி வதைக்கும் வரி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர், மகளிர் அணியினர், பிற அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிரணி து.செயலாளர் கீர்த்திகா முனியசாமி கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் உயர்த்தாதே உயர்த்தாதே மின் கட்டணத்தை உயர்த்தாதே, வதைக்காதே வதைக்காதே மக்களை வாட்டி வதைக்காதே, மூழ்குதே மூழ்குதே தமிழகம் இருளில் மூழ்குதே என்ற பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோசமிட்டனர். இதில் Ex அமைச்சர் மணிகண்டன், ராமநாதபுரம் நகர செயலாளர் பொறியாளர். பால்பாண்டி, அனைத்துலக மாநில MGR மன்ற து.செயலாளர் R.G.ரத்தினம், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆணி முத்து, சுந்தரபாண்டியன், EX.MP நிறைகுளத்தான், பரமக்குடி முன்னாள் எம்எல்ஏக்கள் சதன் பிரபாகரன்,டாக்டர் முத்தையா, Ex நகர் செயலாளர் K.C.வரதன், மாவட்ட ஐ.டி.விங் செயலாளர் சரவணன், மாவட்ட மகளிரணி தலைவி ஜெய்லானி சீனிக்கட்டி, து.செயலாளர் கவிதா சசிகுமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன், காரைக்குடி ஆவின்பால் துணைதலைவர். நாகநாத சேதுபதி,ஒன்றிய செயலாளர்கள் மண்டபம் ஒன்றியம் கிழக்கு ஜானகிராமன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையா,நயினார் கோவில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, பரமக்குடி ஒன்றிய செயலாளர் முத்தையா, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர். மண்டபம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலளார் ஆர்.ஜி. மருதுபாண்டியன் நன்றியுரை கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி,N.A.ஜெரினா பானு