மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
வேலூர் மாவட்டம் காட்பாடி திருநகரில் அமைந்துள்ள BMD ஜெயின் பள்ளிக்குச் செல்லும் நான்கு வழிகளிலும் ஸ்மார்ட் சிட்டிகாக நோண்டப்பட்ட சாலைகள் சரிவர முடிக்காமல் ஆங்காங்கே குண்டும் குழியுமாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் பள்ளத்தில் மாட்டிக் கொண்டும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் அந்த வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர் இதனை அதிகாரிகள் உயிர் சேதம் எதுவும் நிகழாத வண்ணம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். அடுத்த கட்டமாக அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர்.
D. Noble Livingston. Sub Editor