அருள்மிகு முத்துமாரியம்மன் முளைக் கொட்டு உற்சவ விழா!!
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் புளிக்காரத்தெரு அருள்மிகு முத்துமாரியம்மன் முளைக் கொட்டு உற்சவ விழா!!
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் புளிக்காரத்தெருவி லுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு 139 ஆம் ஆண்டு முளைக்கொட்டு உற்சவ விழாமிக சீரும்சிறப்புமாக நடைபெற்றது.31.7.20 22 அன்று முத்து எடுத்தல் நிகழ்ச்சியும் 28.2022, செவ்வாய்க்கிழமை மாலை அம்மனுக்கு காப்பு கட்டுதலும், முத்து பரப்புதலும் நடைபெற்று, 5.8.22 மாலை திருவிளக்கு பூஜையும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 9.8. 22 அன்று சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று, மாலை அம்மன் அலங்காரத்தில் முக்கிய வீதி வழியாக வலம் வந்து முகவை ஊரணியில் கரகம் கட்டி, சன்னதி வந்தடைந்தது. அன்று இரவு அம்பாளுக்கு தீப ஆராதனை நடைபெற்றது.10.8.22 அன்று மாலை 3 மணிக்கு மேல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் பாரிகள் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக நொச்சியூரணி சென்று பூரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை முன்னாள் அதிமுக நகர் செயலாளரும், புளிக்காரத்தெரு தலைவருமான M.அங்குச்சாமி உள்ளிட்ட விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி