மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளில் மூன்றாம் பரிசை வென்ற ஒசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்
மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளில் மூன்றாம் பரிசை வென்ற ஒசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மேயரிடம் வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவிகளுக்கு இடையேயான மாநில கைப்பந்து போட்டிகள் ஈரோட்டில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது..
இதில் பங்கேற்ற ஒசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி மூன்றாம் பரிசை வென்று அசத்தியது..
மூன்றாம் பரிசை வென்ற ஒசூர் அரசுப்பள்ளி மாணவிகள், ஒசூர் மாநகர மேயர் திரு S.A.சத்யா அவர்களை நேரில் சந்தித்து பரிசுகளை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
Hosur Reporter. E. V. Palaniyappan